2025 இல் NPP அடிமட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியானது

2025 இல் NPP அடிமட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியானது

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

மொத்தம் 4,503,930 வாக்குகளைப் பெற்று
3,927 உள்ளூராட்சி மன்ற ஆசனங்களை வென்றுள்ளது .

இது வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகிறது

தேசிய மக்கள் சக்தி மொத்தம் 265 உள்ளூராட்சி மன்றங்களை வென்றுள்ளது . இது ஐக்கிய மக்கள் சக்தியை விட 12 இடங்கள் அதிகமாகும் .

இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்திய கட்சிகளான ,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு இம்முறை தேர்தலில் ஒரு உள்ளூராட்சி மன்றத்தைக் கூடப் பெற முடியாது போயுள்ளது.

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் இயக்கத்தில் ஒரு வியத்தகு மாற்றத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது .

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இந்த தேர்தலினூடாக அடிமட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியாக அதன் நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 வாக்குகளையும் 1,767 இடங்களையும் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 954,517 வாக்குகளுடன் 742 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது .

குறிப்பிடத்தக்க நகர்ப்புற செல்வாக்கைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி தற்போது 488,406 வாக்குகளுடன் 381 இடங்களை மட்டுமே வென்றது,

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )