
மாணவி அம்க்ஷிகாவின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணைகள்வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி
கொட்டஹேன மாணவி அம்க்ஷிகாவின் மரணம் தொடர்பாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகத்தின் அவசர ஹாட்லைன் எண்ணுக்கு 109 ற்கு மூன்றாம் தரப்பினர் முறைப்பாடுகளை வழங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
இறந்த சிறுமி கல்வி பயிலச்சென்ற பிரத்தியேக வகுப்பொன்றில் மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதாகவும் , இதனால் சிறுமி மன அழுத்தத்திற்கு ஆளாக்கியமையால் ,
அதன் விளைவாக இந்த மரணம் நிகழ்ந்ததாகவும் இந்த முறைப்பாடளிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விடயங்களை நீதிமன்றத்தில் முன்வைப்பதாகவும்
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும்
புலனாய்வுப் பணியகம் மற்றும் பம்பலப்பிட்டிபோலீசாரால்
மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதேவேளை , மாணவியை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் குறித்த ஆசிரியர் ,கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது .

