வெலிமடையில் வீதியை விட்டு விலகி பஸ் விபத்து

வெலிமடையில் வீதியை விட்டு விலகி பஸ் விபத்து

வெலிமட , டயரபா பகுதியில் தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 19 பேர் காயமடனர்.

பண்டாரவளையில் இருந்து வெலிமடை நோக்கி பயணித்த தனியார் பஸ் நேற்றிரவு விபத்துக்குளாகியுள்ளது .

பஸ் விபத்தில் காயமடைந்த சுமார் 20 பயணிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் மிராஹாவத்த பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ, வெலிமட மற்றும் பதுளை வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )