
ட்ரம்ப் வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மே 13 ஆம் திகதி வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
ஓவல் அலுவலகத்திற்குத் திரும்பிய பிறகு அவர் மேற்கொள்ளவுள்ள முதல் பெரிய வெளிநாட்டுப் பயணமாக இந்தப்பயணம் குறிப்பிடப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது, அவர் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கட்டாரில் தங்குவார் என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை ரியாத்தில், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நடத்தும் வளைகுடா ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் ட்ரம்ப் கலந்துகோவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
.

