
சீனாவில் கடும் வெள்ளப்பெருக்கு ; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சீனாவில் ஹூனான் மற்றும் ஹுபே மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ளது.
ஹுனான் மாகாணத்தில் பெய்த கனமழையால் லிசூய் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் பாதுகாப்பு அளவைத் தாண்டி 2 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்தோடுவதால், கரையோரங்களில் உள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதே போன்று, ஹுபே மாகாணத்திலும், ஏராளமான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
CATEGORIES China

