
அரசாங்கத்தால் செய்ய முடியாததை எதிர்க்கட்சியாகிய நாம் செய்து காட்டுகிறோம்
அரசாங்கத்தால் செய்ய முடியாததை, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் செய்து காட்டும்.
மக்களின் துன்பங்களைப் போக்கச் செய்வோம். தற்போதைய அரசாங்கம் வாய்போச்சு மூலம் மட்டுமல்லாது பொய்கள் மூலமும் மக்களை ஏமாற்றி வருகிறது. உண்மை, நடைமுறை யதார்த்தம் மற்றும் அபிவிருத்தி மூலம் மக்களை அதிகாரப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்.
முக்கிய அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் தேர்தல் மேடைகளில் கலந்து கொள்வதைப் பாரக்கிறோம். இன்று அவர்கள் மக்கள் மத்தியில் செல்கிறார்கள் இல்லை. தேர்தல் முடிந்த பிற்பாடும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அரசியல்வாதிகள் மக்களுக்கான தமது உண்மையான கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றி வருகின்றனர்.
தேர்தலுக்குப் பிறகும் மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்து ஆராய்ந்து, குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

