
157 உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர்கள் தெரிவு குறித்த விசேட வர்த்தமானி
157 சபைகளுக்கான தலைவர்கள், உபதலைவர்களை தெரிவு செய்து நியமிக்கும் நடவடிக்கைகள் இந்த மாதத்தின் வார நாட்களில் இடம்பெறுமென அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது .
அந்தந்த மாகாணங்களுக்கு பொறுப்பான உள்ளூராட்சி சபை ஆணையாளர்களினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை தலைவர்கள், உப தலைவர்கள் தெரிவு செய்யப்படாத 178 உள்ளூராட்சி சபைகளில் 157 சபைகளுக்கான தலைவர்கள், உபதலைவர்கள் தெரிவுசெய்யப்படவுளார்கள்.
மேல் மாகாணத்தில் 21 சபைகள், வடமேல் மாகாணத்தில் 18 சபைகள், மத்திய மாகாணத்தில் 30 சபைகள், ஊவா மாகாணத்தில் 12 சபைகள், கிழக்கு மாகாணத்தில் 30 சபைகள், வட மாகாணத்தில் 31 சபைகள், தென் மாகாணத்தில் 15 சபைகள் என மொத்தமாக 157 சபைகளுக்கான தலைவர்கள் உப தலைவர்கள் நியமனங்கள் இடம்பெறவுள்ளன .
CATEGORIES Sri Lanka

