
உதய கம்மன்பிலவின் பயணத் தடை நீக்கம்
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய தொழிலதிபர் ப்ரையன் ஷாடிக்கிற்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா உள்ளூர் நிறுவன பங்குகளை நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

