
வேனும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ; இளைஞர் ஒருவர் பலி
மட்டக்களப்பு ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் புதிய காத்தான்குடி 06 ஆலிம் வீதி தோணா சந்தி எனும் முகவரியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அப்துல்லாஹ் 21 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வேனும் மோட்டார்சைக்கிளும் ஆரையம்பதி 5ம் கட்டை பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் உள்ள சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சோபிதன்
CATEGORIES Sri Lanka

