
வவுனியாவில் 10 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
வவுனியாவில் வீட்டில் மறைந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வவுனியா கதிரவேல் பூவரசங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 10 கிலோ கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதுடன் 45 வயதுடைய ஒருவரினையும் கைதுசெய்து ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
CATEGORIES Sri Lanka

