சச்சின்னின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்

சச்சின்னின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (12) தொடங்கியது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

முதல் நாள்முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் பவுமா 3 ரன்களுடனும் பெடிங்ஹாம் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சச்சினின் மிக முக்கியமான சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினை ஸ்டீவ் ஸ்மித் முந்தியுள்ளார். ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சச்சின் 6 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 7 அரைசதங்கள் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )