
22 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி, 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மன்னார் கடற்பரப்பில் மேலும் 10 மீனவர்கள் இரண்டு படகுகளுடன் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

