
இன்று காலை ஜனாதிபதி நாடு திரும்பினார்
ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (15) காலை நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி இன்று (15) காலை 08.58 மணிக்கு டொஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெர்மனிய ஜனாதிபதி பிராங்க்-வோல்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் கடந்த 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

