
”இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்”
இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், “எங்கள் மீது இஸ்ரேல் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்” என்று ஈரான் நாட்டின் இராணுவ அதிகாரி ஜெனரல் மொஹ்சென் ரெசா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் இந்த ஈரான் இராணுவ அதிகாரியின் கருத்தை பாகிஸ்தான் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News

