
மோட்டார் சைக்கிளில் கட்டிபிடித்தபடி பயணம் செய்த காதல் ஜோடிக்கு அபராதம்
மோட்டார் சைக்கிளில் கட்டிபிடித்தபடி பயணம் செய்த காதல் ஜோடிக்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பதிவாகியுள்ளது.
இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஓட்ட, அவரது காதலி மோட்டார் சைக்கிளின் எஞ்சினில் அமர்ந்து கொண்டு இளைஞரை இறுக்கமாக கட்டிபிடித்தபடியே பயணம் செய்துள்ளார்.

இதனை அவ்வழியே காரில் வந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஆபத்தான முறையில் பயணம் செய்த காதல் ஜோடிக்கு போக்குவரத்து பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.
CATEGORIES India

