கொலன்னாவ நகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு

கொலன்னாவ நகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது .

இன்று காலை கொலன்னாவ நகர சபை தலைவர் வாக்கெடுப்பின் போது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

கொலன்னாவ நகர சபையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு
10 இடங்களும், தேசிய மக்கள் 9 இடங்களும் கிடைத்திருந்தன .

வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட கருத்துமுரண்பாடுகளையடுத்து 9 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர். எனினும் ஐக்கிய மக்கள் சக்தியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற சுசில் குமார, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவைத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் 10 வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தம்மிக்க விஜயமுனி கொலன்னாவ நகர சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவர் பதவி சமன் செனவிரத்னவுக்கு வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )