
மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்
கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்று தனிமையில் இருந்த மனைவியின் மூக்கை இளைஞன் ஒருவர் கடித்து துப்பிய சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த இளைஞனின் மனைவிக்கு அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்து கொண்ட இளைஞன் ஒரு நாள் கள்ளக்காதலன் வீட்டிற்குச் சென்ற தனது மனைவியை பின்தொடர்ந்து சென்று அங்கு கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த தன் மனைவியின் மூக்கை கடித்து துப்பியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் கணவனை கைது செய்துள்ளனர்.
CATEGORIES India

