
காலி மாநகர சபை தேசிய மக்கள் சக்தி வசமானது
காலி மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி இன்று (20) தனது அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
அதன்படி, இன்று நடைபெற்ற மாநகர சபையின் முதல் கூட்டத்தில், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுனில் கமகே 19 வாக்குகளைப் பெற்று மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறியதாக அறியமுடிகிறது.காலி மாநகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்

