
வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தில் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் செயற்பாடுகள் மாணவர்களால் முன்னெடுப்பு
தேசிய சுற்றாடல் வாரத்தினை சிறப்பிக்கும் வகையிலும் முடிவுறுத்தப்படாத நிலையில் இருந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் என்ற வகையில் பல்வேறு வேலை திட்டங்கள் வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் நேற்று (24) வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தில் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் செயற்பாடுகள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன.
வித்தியாலயத்தில் உள்ள 15 வகுப்பு பொறுப்பாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்திற்கு முதல்வர் ஷல்மானுல் ஹரீஸ் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஆசிரியர்களின் வழிகாட்டலில் இத்திட்டம் நடைபெற்றது.




CATEGORIES Sri Lanka

