
கந்தானையில் துப்பாக்கிச் சூடு ; இருவர் காயம்
கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இன்று (03) காலை காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் தற்போது இராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

