பேராதனையில் 10 000 ரூபாய் இலஞ்சம் இருவர் கைது

பேராதனையில் 10 000 ரூபாய் இலஞ்சம் இருவர் கைது

பேராதனையில் 10 000 ரூபாய் இலஞ்சம் பெற்றபோது அரச உத்தியோகஸ்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் தாவர வளர்ச்சி ஹார்மோன்கள் தயாரிக்கும் தொழிலைப் பதிவு செய்வதற்கும் உற்பத்தி செய்யப்படும் பூச்சிக்கொல்லிகளின் மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்கும் வந்த அதிகாரிகள் தாம் பயணித்த வாகனத்திற்கு எரிபொருள் வாங்குவதற்கு 10,000 ரூபா கோரியுள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார் .

இதன்போது பூச்சிக்கொல்லிகள் பதிவாளர் அலுவலகத்தின் அபிவிருத்தி அதிகாரி மற்றும் சாரதியொருவர் முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )