சாதகமான தீர்ப்பை வழங்க 100000 ரூபாய் லஞ்சம் கேட்ட நீதிபதி மற்றும் இலிகிதர் கைது

சாதகமான தீர்ப்பை வழங்க 100000 ரூபாய் லஞ்சம் கேட்ட நீதிபதி மற்றும் இலிகிதர் கைது

கதுருவெல குவாசி நீதிமன்ற நீதிபதி மற்றும் இலிகிதர் ஒரு லட்ச ரூபாவை லஞ்சமாக கேட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .

அலுவலக வளாகத்தில் வைத்து இருவரும் இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

விவாகரத்து வழக்கொன்றில் பெண்ணுக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக ஒரு இலட்சம் இலஞ்சம் கோரப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் கதுருவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )