ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்துள்ளார் என்பதை ஈரான் உறுதி செய்துள்ளது

ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்துள்ளார் என்பதை ஈரான் உறுதி செய்துள்ளது

ஈரானிய அரசுத் தொலைக்காட்சி (State TV) சற்றுமுன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 01, 2026 அன்று காலை 07:02 மணியளவில் ஈரானிய ஊடகங்கள் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

தாக்குதலின் பின்னணி: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய “ஆபரேஷன் எபிக் ஃபியூரி” (Operation Epic Fury) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டெஹ்ரானில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் இல்லம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது.

முன்னதாக ஈரானிய அதிகாரிகள் இதனை “உளவியல் போர்” என்று மறுத்து வந்த நிலையில், தற்போது அரசுத் தொலைக்காட்சியே மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

காமனெயி மரணத்திற்கு இரான் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என, அரசு தொலைக்காட்சி செய்தியாளர் கண்ணீருடன் தெரிவித்தார்.

இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையுடன், இரானில் உள்ள பல அரசு ஊடகங்கள் அயதுல்லா காமனெயி மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

கமேனியின் மகளும் பேரனும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானியச் செய்தித் தரவுகள் தெரிவிக்கின்றன.

எனினும், ஈரானிய அதிகாரிகள் இதனை “உளவியல் போர்” என மறுத்துள்ளனர்.

உயர் தலைவரும் அதிபரும் பாதுகாப்பாக இருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானில் நடத்தப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் குறைந்தது 133 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 200 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய HRANA செய்தி நிறுவனம் கூறுகின்றது.

இதேவேளை மினாப் பகுதியில் உள்ள சிறுமிகள் பாடசாலையின் மீதான தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபையின் முன்னாள் செயலாளர் அலி ஷம்கானி, புரட்சிகர பாதுகாப்புப் படை தளபதி முகமது பக்பூர், பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசிர்சாதே உட்பட 7 உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதேவேளை ஈரானின் பதிலடித் தாக்குதலில் கத்தார் மீது 66 ஏவுகணைகள் வீழ்ந்துள்ளதாகவும் இதில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )