ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக ட்ரம்ப் மற்றும்நெதன்யாகு அறிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக ட்ரம்ப் மற்றும்நெதன்யாகு அறிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஆகியோர் அறிவித்துள்ளனர்.

தெஹ்ரானில் உள்ள அவரது இல்லம் மீதான தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

கமேனியின் மகளும் பேரனும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானியச் செய்தித் தரவுகள் தெரிவிக்கின்றன.

எனினும், ஈரானிய அதிகாரிகள் இதனை “உளவியல் போர்” என மறுத்துள்ளனர்.

உயர் தலைவரும் அதிபரும் பாதுகாப்பாக இருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானில் நடத்தப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் குறைந்தது 133 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 200 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய HRANA செய்தி நிறுவனம் கூறுகின்றது.

இதேவேளை மினாப் பகுதியில் உள்ள சிறுமிகள் பாடசாலையின் மீதான தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபையின் முன்னாள் செயலாளர் அலி ஷம்கானி, புரட்சிகர பாதுகாப்புப் படை தளபதி முகமது பக்பூர், பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசிர்சாதே உட்பட 7 உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதேவேளை ஈரானின் பதிலடித் தாக்குதலில் கத்தார் மீது 66 ஏவுகணைகள் வீழ்ந்துள்ளதாகவும் இதில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டோஹா நகரில் 20-க்கும் மேற்பட்ட வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

துபாயின் ஜெபல் அலி (Jebel Ali) துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஈராக்கின் பஸ்ரா நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மூவர் காயமடைந்துள்ளனர்.

டெல் அவிவ் நகர் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
புதிய ஏவுகணை அலைகள் இஸ்ரேலை நோக்கி வருவதாக அந்நாட்டு ராணுவம் எச்சரித்துள்ளது.

பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. கமேனி கொல்லப்பட்டதை தம்மால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என ஐநா பொதுச்செயலாளர் என்டனியையோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

மோதலைத் தணிக்க போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குத் தாம் தயார் என துருக்கி அறிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதலை சிலி நாடு கண்டித்துள்ளது. ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்கத் தளங்கள் மீது பதிலடி கொடுக்க ஈரானுக்கு உரிமை உண்டு என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு (Indoor) அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ரஃபா உட்பட கார்சாவுக்கான அனைத்து எல்லைகளையும் இஸ்ரேல் காலவரையறையின்றி மூடியுள்ளது.

பாதுகாப்பு கருதி ஜெருசலேமில் உள்ள புனிதத் தலங்கள் வழிபாட்டாளர்களுக்கு மூடப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )