ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) ஹோர்முஸ் நீரிணை ஊடாக எந்தவொரு கப்பலுக்கும் பயணிக்க அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.

ஈரானிய தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி ஈரானிய ஆயுதப்படைகள் பழிவாங்கும் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன.

மேலும், ஈரானிய தாக்குதல்களின் விளைவாக இதுவரை 14 அமெரிக்கத் தளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலைமையின் காரணமாக, பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய கிழக்குப் பயணிக்கும் பல விமான நிறுவனங்கள் தற்காலிகமாகத் தங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளனர்.

அதேவேளை, பல மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன.

உலகின் முக்கிய எண்ணெய் கடத்தல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமை, உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக மதிப்பிடப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )