வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) காலை 09.00 மணி முதல், நாளை (14) காலை 09.00 மணி வரை சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 55-65 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கக்கூடும். 

காலியிலிருந்து கொழும்பு வழியாக புத்தளம் வரையிலான கடற்கரைக்கு அப்பலான பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50-55 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் ஓரளவு கொந்தளிப்பாகவோ அல்லது கொந்தளிப்பாகவோ இருக்கக்கூடும். 

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாலான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.5 – 3.0 மீட்டர் வரை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேலும் , புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடையும் வாய்ப்பும் இருப்பதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )