
நானுஓயா ரதல்ல மக்கள் வீதியை புனரமைக்க கோரி போராட்டம்
நானுஓயா ரதல்ல கீழ் பிரிவில் காணப்படுகின்ற வீதியை உடனடியாக புனரமைத்து தருமாறு கோரி இன்று (14) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த தோட்டத்தில் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற போதிலும்
இத்தோட்டத்தில் இருந்து தலவாக்கலை செல்லும் இரண்டு கிலோமீட்டர் தூரங்கொண்ட வீதி பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

இதனால் இங்கு வாழும் மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் இப்பாதை காணப்படுவதாக தெரிவித்து இப்பாதையை உடனடியாக சீரமைத்து தருமாறு கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இவ் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் பாடசாலை சீருடையுடன் பாடசாலை மாணவர்களும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


CATEGORIES Sri Lanka

