
பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஹர நீதவான் நீதிமன்றத்தின் தலைமை நீதவான் காஞ்சனா என் சில்வா முன்னிலையில் இன்று (14) ஆஜரான பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரிபத்கொட பகுதியில் நில மோசடி தொடர்பான வழக்கை விசாரித்து வந்தபோதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

