
கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து ; இருவர் பலி
கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் , இன்று (15) மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் பதிவாகியுள்ளது.
காரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த காரில் பயணித்த இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த இருவரும் மொனராகலை, ஒக்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

