போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மொரட்டுவையில் பதிவாகியுள்ளது.

நேற்று (14) இந்த சோதனை மேற்கொள்ளப்பட்ட போது குறித்த நபர் 10 5,000 ரூபாய் நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதானவர் மொரட்டுவ, ராவதவத்தையைச் சேர்ந்த 52 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை மேலும் விசாரித்தபோது, இந்த போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு அச்சு இயந்திரம் மற்றும் 25 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள், 08  1,000 ரூபாய் நாணயத்தாள்கள், 100 ரூபாய் நாணயத்தாள்கள் மற்றும் 02  20 ரூபாய் நாணயத்தாள்கள் சந்தேக நபரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )