
நெடுந்தீவில் உயிருடன் பிடிபட்ட முதலை கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது
நெடுந்தீவில் சனிக்கிழமை (19) உயிருடன் பிடிபட்ட முதலை நேற்றையதினம் (20) கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
5 அடி நீளமுடைய குறித்த முதலை நெடுந்தீவு பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு நேற்று (20) கடற்படைப் படகு மூலம் குறிகாட்டுவனுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
நெடுந்தீவு வெட்டுக்களிப் பகுதியினை அண்மித்த இடத்தில் உள்ள நீர் முற்றாக வற்றிப்போன பாழடைந்த கிணற்றில் இருந்தே குறித்த முதலை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

