பேஸ்புக் பார்ட்டி ; 21 பேர் கைது

பேஸ்புக் பார்ட்டி ; 21 பேர் கைது

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல் விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 21 பேர் பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் கடுவெல வெலிவிட்ட பகுதியில் பதிவாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பல வரி இல்லாத இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள், “பீல்” எனப்படும் ஏழு போதை மாத்திரைகள் மற்றும் சில பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 22 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடுவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )