
தாய்லாந்து- கம்போடியா இடையே போர் நிறுத்தம்
தாய்லாந்து- கம்போடியா இடையே எல்லைப்பிரச்சினை காரணமாக திடீர் போர் வெடித்தது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது.
இந்த நிலையில் தாய்லாந்து-கம்போடியா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக மலேசியாவில் நேற்று (28) முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சவார்த்தையில் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயாவும் கம்போடியா பிரதமர் ஹூன் மானெட்டும் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, எல்லை தொடர்பாக தாய்லாந்து- கம்போடியா இடையில் நீடித்த போர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள தாய்லாந்து- கம்போடியா நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

