
மேல் மாகாணத்தில் போக்குவரத்து குற்றங்களுக்கான நேரடி அபராதம் வசூலிக்கும் திட்டம் ஆரம்பம்
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு , டிஜிட்டல் அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்துவதை எளிதாக்கும் நோக்கில், நேரடி அபராதம் வசூலிக்கும் முறையை மேற்கு மாகாணத்திற்கு அறிமுகப்படுத்துவது தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று (28) நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் அவை தலைவருமான பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேல் மாகாணத்தின் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் ஆயிரம் பேருக்கு கையடக்க தொலைபேசிகளை வழங்கி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், அதற்காக லங்கா பே நிறுவனத்தின் ஊடாக தொலைபேசிகளை இலவசமாக வழங்கியதுடன், மொபிடல் நிறுவனத்தின் ஊடாக இலவசமாக அவசியமான சிம் அட்டைகள் வழங்கப்பட்டன.

இத்திட்டம் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களை மையப்படுத்தியதாக செயற்படுத்தப்பட்டதுடன் அதன் வெற்றியை அடுத்து, அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட மேல் மாகாணத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க; 22 மில்லியன் மக்கள் தொகையுடன் சம்பந்தப்படும் இந்த போக்குவரத்து சேவையில் ஒரே ஒரு திட்டமாகவும், சவால் மிக்க வேலைத் திட்டமாகவும் தொழில்நுட்பம் முகாமைத்துவம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வலுப்படுத்தலுடனும் இது மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதனால் வாகன விபத்துகளை குறைக்க முடிவதுடன் வீதிகள் மாத்திரமன்றி போக்குவரத்தில் பாதுகாப்பு பரவலாக்கப்பட்டதாகவும் காணப்படும்.
பிரபலமான அரசியலுக்காக வீதிகளை நிருமாணிக்கும் போது பாதுகாப்பான முறைகளை பின்பற்றி எதிர்காலத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

