சபரிமலை ஐயப்பன் ஆலயம் புனித யாத்திரை தலமாக அமைச்சரவை அங்கீகாரம்

சபரிமலை ஐயப்பன் ஆலயம் புனித யாத்திரை தலமாக அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரிகர் தலமாக சபரிமலை வழிபாட்டுத் தலத்தைப் பிரகடனப்படுத்தல் மற்றும் அதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையின் இந்து பக்தர்கள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 01 ஆம் தொடக்கம் அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவின் கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று தரிசிக்கின்றனர்.

தற்போது ஆண்டுதோறும் 15,000 இற்கும் அதிகமான இலங்கை இந்து பக்தர்கள் கலந்து கொள்கின்ற தலயாத்திரை மையமாக சபரிமலை ஐய்யப்பன் ஆலயம் அமைந்துள்ளது.

இலங்கை இந்து யாத்திரிகர்களால் நீண்டகாலமாக மேற்கொள்ளப்படுகின்ற இந்த வழிபாட்டினை ,
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித தலயாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )