யாழில் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழில் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (21) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை நாளில் நடைபெறுவதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கும் வகையில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கக் கோரி, பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று புதன்கிழமை மதியம் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சின் செயலாளருக்கு உடனடியாக நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்குமாறு பணித்துள்ளம குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )