ரணில் விக்கரமசிங்க கைது

ரணில் விக்கரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு பயணம் செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில்  ஜனாதிபதியாக பதவி வகித்த  ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மேலும், குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )