
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி
பாணந்துறை – வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்ததாக சந்தேகிக்கப்படும் 2 நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்த நபர் அலுபோகஹவத்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

