கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 குற்றக்குழு உறுப்பினர்கள் இலங்கையை நோக்கி புறப்பட்டனர்

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 குற்றக்குழு உறுப்பினர்கள் இலங்கையை நோக்கி புறப்பட்டனர்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 குற்றக்குழு உறுப்பினர்களை ஏற்றிச் வரும் விமானம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் புறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி இலங்கையை விட்டு தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சாலிந்த’, ‘பெக்கோ சமன்’ மற்றும் ‘நிலங்க’ உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவின் உறுப்பினர்கள் 6 பேர் இந்தோனேசியாவில் கைது கைதுசெய்யப்பட்டனர்.

சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இந்த ஐந்து பேரும், இந்தோனேசியாவின் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பிரதான குற்றவாளியான கெஹெல்பத்தார பத்மே, மலேசியாவிலிருந்து தப்பிச் சென்று ஜகார்த்தாவில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் இந்தோனேசிய அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )