18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கினார்.

விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல் முந்தைய பதவிகள்

திரு. எஸ்.எஸ்.கே. விதான மாவட்ட நீதிபதி

    Mr. Vithana

    திரு. ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க மாவட்ட நீதிபதி

      Mr.Aththanayake

      திரு. ஏ.எம்.எம். ரியால் மாவட்ட நீதிபதி

        Mr. Riyal

        திரு. டீ.பீ. முதுங்கொடுவ, மாவட்ட நீதிபதி

        Mr.Mudunkotuwa

        திரு. எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத் மேலதிக மாவட்ட நீதிபதி

          Mr.Herath

          திரு. ஜே. கஜனிதீபாலன் மாவட்ட நீதிபதி

            Mr. kajini deepan

            திரு. டி.எம்.டி.சி. பண்டார நீதிச் சேவை ஆணைக்குழுவின்
            சிரேஷ்ட மேலதிக செயலாளர்

              Mr. C Bandara

              திருமதி. எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன மேலதிக மாவட்ட நீதிபதி

              Ms. Wijerathne

                திரு. டி.எம்.ஏ. செனவிரத்ன மேலதிக மாவட்ட நீதிபதி

                Mr. Senavirathne

                  திரு. ஏ.ஏ. ஆனந்தராஜா நீதவான்

                    Mr. Anandharaja

                    திரு. ஜி.என். பெரேரா மாவட்ட நீதிபதி

                      Mr. Perera

                      திரு. ஏ. ஜுடேசன் மாவட்ட நீதிபதி

                        Mr. A.Judeshan

                        திருமதி.டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க மாவட்ட நீதிபதி

                          Ms.Weerathunge

                          திரு.ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய மாவட்ட நீதிபதி

                            Mr. Waligodapitiuya

                            செல்வி கே.டி.என்.வி. லங்காபுர, நீதவான்

                              Ms. Lankapura

                              திரு. டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க மாவட்ட நீதிபதி

                                Mr.D. Dissanayake

                                திரு. எம்.ஐ.எம். ரிஸ்வி மாவட்ட நீதிபதி

                                  Mr. M.Risvi

                                  திருமதி. ஏ. ஜெயலக்ஷி டி சில்வா சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி

                                    இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

                                    ஜனாதிபதி ஊடகப் பிரிவு

                                    CATEGORIES
                                    TAGS
                                    Share This

                                    COMMENTS

                                    Wordpress (0)
                                    Disqus ( )