
அதிவேகமாக பஸ்களை ஓட்டிச் சென்ற இரண்டு சாரதிகள் கைது
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி தனியார் பஸ்களை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சாரதிகள் இருவரை ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு நேற்று (06) கைது செய்துள்ளது.
குறித்த இரு பஸ்களும் கண்டி பஸ் நிலையத்திலிருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கியிருந்த நிலையில் கினிகத்தேனை பகுதியில் பஸ்களின் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், 2 பஸ்களின் சாரதிகள் ஆபத்தான முறையில் பஸ்களை அதிவேகமாக ஓட்டிச் செல்வதை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து, ஹட்டன் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார், 2 பஸ்களையும் ஓட்டிச் சென்ற சாரதிகள் இருவரையும் கைது செய்யுமாறு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka

