
எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற பினர போயா தின தர்ம போதனை நிகழ்வு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அறிவுறுத்தலின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தால் ஒவ்வொரு பௌர்ணமி தினங்களிலும் ஏற்பாடு செய்யப்படும் தர்ம போதனை நிகழ்வுத் தொடரின் மற்றுமொரு கட்டம் இன்று (07) பினர போயா தினத்தை முன்னிட்டு கொழும்பு 07, பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண தர்ம ஆசிரமத்தில் இடம்பெற்றது.
இன்றைய தர்ம போதனையை ஒருவல தர்மாஸ்ரம தியான மையத்தின் தலைமை தேரரும், ஸ்ரீ ரோஹண பிரிவைச் சேர்ந்த வனவாச சங்க சபையின் சிரேஷ்ட அங்கத்தவருமான சங்கைக்குரிய தலகல தம்மஹவேசி தேரர் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.





