பொலிவியாவிடம் தோற்ற பிரேஸில்

பொலிவியாவிடம் தோற்ற பிரேஸில்

தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் கூட்டமைப்பின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், பொலிவியாவில் இன்று (10) நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் பிரேஸில் தோற்றது.

இதேவேளை ஈக்குவடோரில் நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான ஆர்ஜென்டீனா தோற்றது. ஈக்குவடோர் சார்பாகப் பெறப்பட்ட கோலை இன்னர் வலென்சியா பெற்றிருந்தார்.

இந்நிலையில் சிலியில் நடைபெற்ற அந்நாட்டுக்கும், உருகுவேக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )