
திருகோணமலையில் நிலநடுக்கம்
திருகோணமலை கடற்பரப்பில் இன்று (18) மாலை 4:06 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிறுவப்பட்ட நான்கு நிலநடுக்க வரைபடங்களாலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் வரைபடங்கள் மஹகனதராவ, ஹக்மான, பல்லேகல மற்றும் புத்தங்கல ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

