ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் இன்று (19) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, காம்சட்கா தீபகற்பத்தின் தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சாட்ஸ்கிக்கு கிழக்கே 128 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில், 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் ஆபத்தான அலைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )