44 கிராம் போதைப்பொருள் வைத்திருந்த மலேஷிய தமிழர் தூக்கிலிடப்பட்டார்

44 கிராம் போதைப்பொருள் வைத்திருந்த மலேஷிய தமிழர் தூக்கிலிடப்பட்டார்

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 2015ம் ஆண்டு சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட, 39 வயதுடைய மலேசிய தமிழர் தட்சணாமூர்த்திக்கு நேற்று மாலை
சிங்கபூர் நீதிமன்றம் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது .

முன்னதாக அவரது தண்டனையை ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்ட போதிலும், நேற்று மாலை சிங்கப்பூர் நீதிமன்ற பணிப்புரையின் அடிப்படையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி மலேசியா, சிங்கப்பூர் எல்லையில் உள்ள உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற மலேஷிய தமிழரும் சிங்கப்பூரைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜெயமணி என்ற பெண்ணும் 44.96 கிராம் டயாமார்ஃபின் (diamorphine) எனும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

இந்த போதைப்பொருள் குற்றத்தில் கிறிஸ்டின் ஜெயமணி என்ற பெண்,கொண்டு செல்பவராக மட்டுமே செயற்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தட்சணாமூர்த்திக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது .

சுமார் 14 ஆண்டுகள் தட்சணாமூர்த்தி சிறைவாசம் அனுபவித்த நிலையில் ,கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் நிறைவேற்றப்பட வேண்டிய மரண தண்டனை நிறுத்தப்பட்டுள்ளது என குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய வழக்கறிஞர் சுரேந்திரன் கே.நாகராஜன் தெரிவித்திருந்தார்.

எனினும் சில மணி நேரங்களுக்கு பிறகு முடிவை மாற்றிய சிங்கப்பூர் சிறை அதிகாரிகள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் இரண்டு மணி நேரத்திற்குள் அவரது உடலைப் பெற்றுக் கொள்ளுமாறும் குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டதாக வழக்கறிஞர் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தட்சணா மூர்த்திக்கான தண்டனை அறிவிக்கப்பட்ட காலம் தொடக்கம் பல வருடங்களாக , மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்ததுடன் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது .

மேலும் தட்சணாமூர்த்தி சிங்கப்பூர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டகாக சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரின் போதைப்பொருள் சட்டங்களின்படி, 15 கிராமுக்கும் அதிகமாக போதைப்பொருள் வைத்திருப்பது அல்லது கடத்துவது தூக்குத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

15 கிராமுக்கு குறைவாக வைத்திருந்தால் அதிகபட்ச சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )