சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 16 இலட்சத்து 78 ஆயிரத்து 346 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 358,165 ஆகும். ஐக்கிய இராச்சியத்திலிருந்து 159,162 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 121,116 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 104,638 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 97,379 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 86,877 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 74,372 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 51,226 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்தின் முதல் 21 நாட்களில் 111,823 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )