
இலங்கை அணிக்கு புகழ்பெற்ற துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரும் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரும் நியமனம்
புகழ்பெற்ற புதிய இரண்டு பயிற்றுவிப்பாளர்கள் ,இலங்கை கிரிக்கெட் அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜூலியன் வூட் (Julian Wood) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் 1 முதல் அமுலாகும் வகையில் ஒரு வருட காலத்திற்கு ஜூலியன் வூட் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக ரெனே ஃபெர்டினாண்ட்ஸ். (Rene Ferdinands) ,செப்டம்பர் 30 முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் 2 வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது .

