
மன்னாரில் ரயிலில் மோதி ஒருவர் பலி
மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

