
மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் குடும்பங்களில் பாடசாலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான புதிய கல்வி நிகழ்ச்சித்திட்டம்
சனாதிபதி நிதிய சட்டத்தின் ஏற்பாடுகள் பிரகாரம் மாணவர்களின் கல்வியைத் தொடர்வதற்கான கல்வி உதவி வழங்குதலின் கீழ் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குடும்பங்களின் பாடசாலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்காக புதியதொரு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சனாதிபதி நிதியம் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கம் யாதெனில், மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது நிகழும் எதிர்பாராத அனர்த்த நிலைமைகளுக்கு ஆளாகும் (மரணமடைதல், திடீர் விபத்துக்களை எதிர்கொண்டு முழுமையாக செயலிழத்தல், வெளிநாடுகளில் சிறைவாசம் அனுபவித்தல் மற்றும் காணாமல் போதல்) மீனவர்களது பாடசாலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு நிதிசார் பங்களிப்பினை வழங்குதல் ஆகும்.
இதன் பிரகாரம் 2025 சனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் மேற்குறித்த அனர்த்தங்களை எதிர்கொண்ட மீனவர்களின் படசாலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கு இதற்காக விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் இது தொடர்பான மேலதிக விபரங்ள் அல்லது விண்ணப்ப படிவங்களை www.presdentsfund.gov.lk இனையதளம் மூலம் மற்றும் எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

